ராமர் கோயில் கும்பாபிஷேகம் : பால் குடம் எடுத்து வழிபாடு
திண்டுக்கலில் அயோத்தி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜக சார்பில் பால் குடம் எடுத்து வழிப்பட்டனர்.
Update: 2024-01-22 02:10 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திண்டுக்கலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி திண்டுக்கல் மா. மு. கோவிலூர், பாறைப்பட்டி பகுதிகளிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதுகுறித்து பெண்கள் கூறியதாவது:அயோத்திகள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பது ஒவ்வொரு இந்தியன் வீட்டிலும் கும்பாபிஷேகம் நடப்பது போல் உள்ளது. அனைவரும் வாழ்த்தி வணங்கும் தருணம் இது. பால் குடம் எடுத்து நாங்கள் அபிஷேகம் செய்து ராம பிராணை பூஜிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.