ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை.
முருக்கேரி மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை தமிழகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்தார். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகள் நடத்தி ரமலான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர், அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
அதேபோன்று பிரம்மதேசம் அடுத்த முருக்கேரி கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது, இந்த சிறப்பு தொழுகையை முன்னிட்டு 7 மணிக்கு பள்ளிவாசலில் தக்பீர் கூற ஆரம்பித்தனர், இதனை தொடர்ந்து 7.30 மணியளவில் பள்ளிவாசலில் இருந்து ஜமாத்தார்கள் மற்றும் முஸ்லீம்கள் ஒன்றிணைந்து ஈத்கா மைதானத்திற்கு சென்றனர், இதனையடுத்து ஈத்கா மைதானத்தில் 8 மணிக்கு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது, இதில் முருக்கேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்வேறு முஸ்லிம்கள் கலந்து கொண்டனர் தொழுகையின் முடிவில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது ரமலான் வாழ்த்தை பரிமாறிக் கொண்டனர்