பாஜக சார்பில் சிறப்பு பூஜை வழிபாடு

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டயையொட்டி கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் பகுதியில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

Update: 2024-01-23 07:18 GMT

சிறப்பு வழிபாடு 

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்வதையொட்டி மாவட்ட பாஜக சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கங்கை அம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சி,  பூஜை வழிபாடு தீபம் ஏற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இதில் பாஜக மாவட்ட ராணுவ பிரிவு துணைத் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாச்சனூர் பஞ்சாயத்து தலைவர் உத்தரகுமார் வரவேற்புரை ஆற்றினார்.

இதில் கே வி குப்பம் ஒன்றிய தலைவர் ஈஷாசங்கர் , மாவட்ட பாஜக நிர்வாகிகள் சீனிவாசலு, முருகேசன் ,அண்ணாதுரை , ஆர் எஸ் எஸ் நிர்வாகி மூர்த்தி, பாஜக ஒன்றிய நிர்வாகிகள் கதிரவன், மோகன்ராஜ், அழகேசன், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள், சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது . இதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு மாச்சனூர் மாச்சனூர் பிள்ளையார் கோயில், கங்கை அம்மன் கோயில், கிராமம் முழுவதும் வீடுகள் முன்பு அகல் விளக்கு  ஏற்றினர்.

இதேபோல் வேலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை விழா  கீழ் ஆலத்தூர் பெருமாள் கோவிலிலும், சேத்து வண்டை   ராமர் கோயில் ராஜா கோயில்  கிருஷ்ணர் பஜனார் கோவில், ராஜகோபால் நகர்  பெரும்புலீஸ்வரர் ஆலயத்திலும் அவ்வை நகர் செல்வ விநாயகர் ஆலயத்திலும் சாமியார் மலை எம்ஜிஆர் நகர் விநாயகர் ஆலயத்திலும் சத்திய சாய் சேவா சமதி பஜனை குழு  ஹரே கிருஷ்ணா பஜனைக்குழு ராமர் பஜனை குழுவினர் மூலம் பஜனைகள் செய்து ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம எனும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து கும்பாபிஷேக விழா சிறப்பாக செய்யப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிசத் துணைத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

Tags:    

Similar News