தேர்தல் பணியில் ஈடுபட்ட சிறப்பு எஸ்எஸ்ஐ மரணம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருந்த சிறப்பு எஸ்எஸ்ஐ பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-21 10:33 GMT

தேர்தல் பணியில் ஈடுபட்ட சிறப்பு எஸ் எஸ் ஐ மரணம்

புதுக்கோட்டை டவுன் உசிலங்குளத்தை சேர்ந்த சண்முகம் என்ற சண்முகசுந்தரம் வயது 58 இவர் டிராபிக் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமயம் சட்டசபை தொகுதியில் பறக்கும் படையில் கடந்த 18 தினங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து உதவி தேர்தல் அலுவலகம் கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

அவருக்கு திருமயம் பஸ் ஸ்டாண்டில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இருந்தார்.

இது குறித்து திருமயம் போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்து போன சண்முகசுந்தருக்கு ஒரு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பறக்கும் படையில் வேலை பார்த்து திடீரென நெஞ்சு வலி காரணமாக மரணமடைந்த செய்தி கேட்டு மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News