கே நடுஅள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கே நடுஅள்ளியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகள் ஆய்வு செய்தல் தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் கே.நடுஅள்ளி ஊராட்சியில் 2024-2025 ஆம் ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் பயனாளிகள் தேர்வு செய்தல் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் கே நடுஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு அப்பாமணி கே நடுஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலும் செந்தில்குமார் வட்டார உதவியாளர் முன்னிலையிலும் நடைபெற்றது. கிராம சபைக் கூட்டத்தின் போது தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் வேலுதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகளை பாதுகாப்பாக கண்காணித்து வளர்க்க வேண்டும். பெண் குழந்தைகளை சிறுவயதில் திருமணம் செய்வது தண்டனைக்குரியது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் லதா கோவிந்தராஜ் துணைத்தலைவர், சக்கரவேல் ஊராட்சி செயலர், முருகன் கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள், கிராம செவிலியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.