கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 68 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2022 - 23ம் நிதியாண்டில் நடைபெற்ற பணிகளுக்கான சமூகத்தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

Update: 2024-06-17 02:44 GMT

சிறப்பு கிராமசபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 68 கிராம ஊராட்சிகளில் கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை கிராம ஊராட்சி வள பயிற்றுநர்களால் சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூக தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கயத்தார் ஊராட்சி ஒன்றியம் வடக்கு இலந்தைகுளம் கிராம ஊராட்சியில் நடந்த சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.

பஞ்சாயத்து தலைவர் கணபதி,உதவி பொறியாளர் செல்வ பாக்கியம், வட்டார வள பயிற்றுனர் இந்திரா சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் மல்லிகா வரவேற்றார். கூட்டத்தில் சமூக தணிக்கை மாவட்ட வள பயிற்றுநர் மணி கலந்து கொண்டு கலந்துரையாடல் செய்தார். இதில் கிராம வள பயிற்றுநர்கள் அனு,இசக்கியம்மாள்,மாலதி,திவ்யபாரதி,உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சங்கீதா நன்றி கூறினார். இதேபோல் 68 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

Tags:    

Similar News