வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கை குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

Update: 2024-06-15 07:14 GMT

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, வாழ்வார்மங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை வகித்தார். துணை தலைவர் கோபி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வட்டார வள பயிற்றுனர் இந்துமதி, ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) வீராசாமி, 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர் மற்றும் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சமூக தணிக்கை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கிராம மக்கள் கிராமத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை பதிவு செய்த சிறப்பு கிராம சபை கூட்டத்தினர், விரைவில் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News