வேப்பங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

வேப்பங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-07-01 10:02 GMT

சிறப்பு கிராம சபை 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அப்பகுதியில் முன்னதாக வீடு கட்டி பழுதடைந்துள்ள வீடுகளை புதுப்பிக்கும் திட்டத்தில் சுமார் 45 வீட்டுகளும், வீடுகள் இல்லாதவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 34 பேருக்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 45 பேருக்கும் என மொத்தம் 121 பேருக்கு தமிழ்நாடு அரசால் வீடுகள் வழங்க வேண்டும் என்று இந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பற்றாளராக விஏஓ சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தஸ்தகீர் பாஷா மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை வழிநடத்தினர். மேலும் வேப்பங்குப்பம் அனந்தபுரம் புதுமனை ரங்கப்பன் கொட்டாய் ஆகிய பகுதிகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறப்பு கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News