பங்குனி உத்திரம் நாமக்கல் நகரில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு !

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார முருகன் கோவில்களில் பக்தர்கள் விரதம் மேற்கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

Update: 2024-03-26 07:31 GMT

முருகன் கோயில்

பங்குனி உத்திரத்தையொட்டி, நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களிலும், குலதெய்வக் கோயில்களிலும் பக்தா்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா். ஒவ்வோா் ஆண்டும் பங்குனி மாதம் வரும் உத்திரம் நட்சத்திரம் முருகனுக்கு உகந்த தினமாகும். அந்த நாளில், முருகன் கோயில்களுக்கு பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமியை வழிபடச் செல்வா். மேலும், குலதெய்வக் கோயில்களிலும் பக்தா்கள் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வா். நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில், காலை, 9:30 மணிக்கு கணபதி ஹோமம், 11:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், இரவு, 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாருதி நகா், ராஜ விநயகா் கோயிலில் கல்யாண சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். முன்னதாக பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்த பால்குடம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நாமக்கல் ,நல்லிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் பெரியூர் சுப்பிரமணியர் கோவிலில், காலை, 7:00 மணிக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். பக்தர்கள் அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாமக்கல்-திருச்சி சாலையில் என்.புதுப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயிலில், முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. நாமக்கல் - சேலம் பைபாஸ், கருங்கல்பாளையம் ஸ்ரீதண்டாயுதபாணி கோவிலில், சிறப்பு யாகம் செய்யப்பட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மோகனூர் காந்தமலை, பாலதண்டாயுதபாணி, தங்கக்கவசத்தில் பக்தர்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News