ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அகஸ்தியர்புரத்தில் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு.
Update: 2024-01-25 07:32 GMT
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதில் நல்லெண்ணெய், அரிசிமாவு, திருமஞ்சன பொடி, வாசனைதிரவியம், பால், தயிர், எலுமிச்சம்பழச்சாறு, பழங்கள், சர்க்கரை, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர், அன்னம், ஜலம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வெள்ளிமலையான் அன்னதான குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.