அமாவாசை நாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்

நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம் கோயில்களில் நடைபெற்ற தை அமாவாசை சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-10 01:17 GMT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவிலில் தை அமாவாசை நாளையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மண்டல பூஜைகள் நடந்துவரும் நிலையில், அரசமரத்தடி விநாயகர் மகளிர் குழுவினர் சார்பில் லட்சுமி நாராயண சுவாமி கோவிலிலிருந்து ஊர்வலமாக சீர் எடுத்து வரப்பட்டது. சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அனைத்து மாரியம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், கோட்டைமேடு காளியம்மன் கோவில், அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயர் கோவில், கள்ளிபாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள், சமயபுரம் மாரியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News