சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி காட்டூர் கைலாஷ்நகர் ஸ்ரீ கைலாச கமல கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்;
Update: 2023-12-31 09:23 GMT
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
திருச்சி காட்டூர் கைலாஷ்நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாச கமல கணபதி ஆலயத்தில் இன்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவ கணபதிக்கு மஞ்சள், திரவியபொடி, அரிசி மாவு, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அருகம்புல், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து தேரில் உற்சவர் எழுந்தருளி ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கணபதியை வழிபட்டனர்.