காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
அதியமான் கோட்டை தட்சணகாசி காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அருள்மிகு ஸ்ரீ தட்சணகாசி காசி காலபைரவர் 1200 வருடம் பழமை வாய்ந்த திருக்கோயில் அதியமான் கோட்டை இன்று சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி காலை 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம் 64 பைரவர் ஹோமம் ஏகாந்த ருத்ர ஹோமம் காலை 8 மணிக்கு கோ பூஜை அஸ்தவ பூஜை காலை 8.30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி திருக்கோயிலை வளம் வருதல் பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும் சுவாமிக்கு ராஜ அலங்காரம் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற வேண்டுமென்று சாம்பல் பூசணிக்காய் தேங்காய் எலுமிச்சம் பழம் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இதில் இரவு 10மணிக்கு 1008கிலோ மிளகாய் 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடைபெறும் 64 பைரவர் யாகம் மகா குருதி பூஜை இரவு 2.30மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் திருக்கோயிலை வளம் வருதல் அதிகாலை 3 மணிஅளவில் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறும் கலச அபிஷேகம் எட்டு வகையான பல அபிஷேகங்கள் நடைபெறும் சுவாமிக்கு சத்ரு சம்ஹாரம் அலங்காரம் செய்யப்படும் சதுர்வேத பாராயணம் சிறப்பு தரிசனம் நடைபெறும் அதியமான் கோட்டை காலபைரவர் அர்ச்சகர் கிருபா தெரிவித்தார்.