கல்லூரியில் பேச்சுப்போட்டி

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் "பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது.

Update: 2023-12-13 10:30 GMT

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் "பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை & கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து நடத்திய பாரத மொழிகளின் திருவிழா -2023 "பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது .

மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. கார்த்திகேயன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் எஸ். தங்கராஜ் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறையைச் சார்ந்த பேராசிரியை ஜோ. தங்கவேணி சிறப்பு விருந்தினரின் அறிமுக உரை வழங்கினார். நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியின் உயர்கல்வி இயக்குநர், கலைமாமணி தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் அரசுபரமேசுவரன் அவர்கள் நடுவராகக் கலந்துகொண்டு பெண்கள் வீரத்தோடும், எழுச்சியுடனும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக விளங்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

இப்போட்டியில் முதல் பரிசாக முதலாமாண்டு தொழில் நிர்வாக துறையைச் சார்ந்த த. இளமதி கீதாவிற்கு ஐந்தாயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக இரண்டாமாண்டு இயற்பியல் துறையைச் சார்ந்த ஆர். மௌனிஷாவிற்கு மூவாயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக இளங்கலை இரண்டாமாண்டு கணிதத் துறையைச் சார்ந்த எஸ். சிவசங்கரிக்கு இரண்டாயிரமும் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட 30-க்கும் மேற்பட்ட. மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக தமிழ்த்துறையைச் சார்ந்த முனைவர் ப. மோகனசுந்தரி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதில் அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News