வளவனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆன்மிக பட கண்காட்சி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆன்மிக பட விளக்கம் மற்றும் ஆன்மிக பட கண்காட்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-25 09:51 GMT
ஆன்மீக புகைப்பட கண்காட்சி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வளவனூர் கலிய வரதராஜ பெருமாள் கோவிலில் வடக்கு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பில் ஆன்மிக பட விளக்கம் மற்றும் ஆன்மிக பட கண்காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதில் வளவனூர் பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா, வக்கீல் சுவை சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனா.