திண்டிவனம் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு போட்டி

திண்டிவனம் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2024-04-13 17:00 GMT

பரிசு வென்ற வீரர்கள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழகத்தில் கேலோ தட்ச சீலா '24' என்ற தலைப்பில் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கிரிக்கெட், கால்பந்து, கைபந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தொடர்ந்து ஒருவாரம் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு போட்டியிட்டனர். தொடர்ந்து இதன் நிறைவு விழாவானது பல்கலைக்கழக விழாப்பேரரங்கில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கி,

படிப்பு டன், விளையாட்டும் ஒருங்கிணைந்ததாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். முன்னதாக இணை வேந்தர்கள் ராஜராஜன், டாக்டர் நிலா பிரியதர்ஷினி, துணைவேந்தர் விவேக் இந்தர்கோச்சர், பதிவாளர் செந்தில் ஆகியோர் போட்டியில் பங்கேற்றவர்களை வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக ஆசிய விளையாட்டில் பெண்கள் கபடியில் தங்கம் வென்றவரும், தற்போதைய இந்திய பெண்கள் கபடி அணி யின் பயிற்சியாளரும்,

தாயான்சந் விருது பெற்றவருமான கவிதா செல்வராஜ் கலந்துகொண்டு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற பேரா.லதா கண்ணன் தலைமையிலான நீல நிறக்குழுவினர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஒருங்கிணைப்பாளர் சூர்யா சபரிநாத் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர் விஜயன், பயிற்சியாளர் கோவர்த்தன்,

உதவிப்பேராசிரியர் கள் அஸ்வின், முருகன், மக்கள் தொடர்பு அலுவலர் ஆரோக்கிய ராஜ், கொள்முதல் மேலாளர் தில்லை கார்த்திகேயன், முதலுதவிக் குழுவின் தலைவர் சுஜாதா ஆகியோர் ஒருவார கால நிகழ்வுகளை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். இதில் இணைப்பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன் சுப்பிரமணியன், கலை அறிவியல் துறையின் டீன் தீபா, பொறியியல் துறை யின் டீன் சுபலட்சுமி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கோபாலக்கண்ணன் உள்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கலைச் செல்வி நன்றி கூறினார்.

Tags:    

Similar News