திருப்பூரில் விளையாட்டு போட்டி: பரிசு வழங்கல்
திருப்பூரில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்,மேயர் பரிசுகளை வழங்கினர்.;
பரிசு வழங்கிய திமுகவினர்
கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற,மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ்MLA , வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆர் பாலசுப்ரமணியம்,1வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரத்தின சாமி மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கள் தேவராஜ்,செயற்குழு குணராஜ், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,
செல்வராஜ் மற்றும் வட்ட கழகசெயலாளர்கள் அய்யம் பெருமாள்,செந்தில்குமார் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.