கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்
நாகர்கோவில் அரசுக் கல்லூரியில் கலைவிழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
தமிழ்நாடு கல்லூரி கல்வி துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் ஜனவரி 22, 23, 24 ஆகிய மூன்று நாட்கள் குமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு கலை மற்றம் அறிவியல் கல்லூரியில் நடந்து வருகிறது.
முதல் நாளான நேற்று 100, 200 மீட்டர் ஓட்டம், குண்டெறிதல் ஆகிய போட்டிகள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 20 கல்லூரிகள் பங்கு பெற்றன. இரண்டாம் நாளான இன்று 23ஆம் தேதி கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறகு பந்து, சதுரங்கம் ஆகிய பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
நாளை 24 ஆம் தேதி கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடக்கின்றன. விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் பாஸ்கரன், நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பிரகாசி அருள் ஜோதி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஷாகுல்ஹமீது, தமிழ் துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் அமுதன், முனைவர் ஜோதி ரவீந்திரநாத் செய்திருந்தனர்.