பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா!
தொடர்ந்து எட்டு வருடமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சேம்பியன் ஆப் சேம்பியன் பட்டத்தை பெற்று சாதனை.
பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா நடைபெற்றது. விழா இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மண்டல முதுநிலை மேலாளர் எஸ்.அருணா அவர்கள் கலந்து கொண்டார். இரண்டாமாண்டு கணினிப் பொறியியல் மாணவி ஆர்.ஸ்வேதா வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் திரு.எஸ்.ஜெகதீஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர் எஸ்.அருணா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில், “விளையாட்டின் மகத்துவத்தினை உணர்ந்த உங்கள் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தும் விதமாக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறார்கள். அந்த வகையில் பாவையில் மாணவர்கள் சாதனை புரிவதற்கு அடையாளமாக விளையாட்டு துறை ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் மற்றும் கூடவே சர்வதேச தரத்தில் விளையாட்டுத்திடலும் அமைத்து தரப்பட்டுள்ளதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். இவைகளின் விளைவாக தான் நீங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் சேம்பியன் ஆப் சேம்பியன் பட்டத்தை தொடர்ந்து எட்டாவது வருடமாக வென்றுள்ளீர்கள். விளையாடுவது ஒரு மாணவனுக்கு ஏன் அவசியம் என்றால் அது ஒழுக்கம்ரூபவ் தன்னம்பிக்கை நேர மேலாண்மை, ஆரோக்கியமான வாழ்வு முறை, தன்னம்பிக்கை போன்ற குணநலன்களை வளர்த்து நம்மை நல்வழிப்படுத்துகிறது. மேலும் சமூகத்தில் உங்களுக்கென்று மரியாதையையும் உருவாக்குகிறது. மேலும் நீங்கள் உங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தி சாதனை புரியும் போதுரூபவ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் உதவித்தொகை பெற்றுரூபவ் உங்கள் முன்னேற்றத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். எனவே விளையாட்டு மாணவர்களாகிய நீங்கள் நல்ல வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடியுங்கள். ஆரோக்கியமான தேகத்தில் தான்ரூபவ் ஆரோக்கியமான மனம் தங்கியிருக்கும். எப்படியெனில் நுரையீரல்ரூபவ் எலும்பு தசைகள், இதயம் சம்பந்தமான பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. நம் ஞாபகத் திறனை அதிகப்படுத்துகிறது. மகிழ்ச்சியாகவும், சுறு சுறுப்பாகவும், நேர்மறையாகவும் வாழ துணைபுரிகிறது. மேலும் நம் உடல் மற்றும் மன ஆற்றலை வலுப்படுத்துகிறது. மேலும் உங்களுக்கு சிறந்த போட்டி மனப்பான்மையும், தலைமைத்துவ பண்பினையும் முடிவெடுக்கும் திறனையும் வழங்குகிறது. மேலும் உங்கள் தொழில் முன்னேற்றப் பாதைக்கும் விளையாட்டு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தையும் தொடர்ந்து போராடக் கூடிய தைரியத்தையும் அளிக்கிறது. வெற்றியைக் காட்டிலும் பங்கேற்றலே முக்கியமாகும். எனவே தோல்வியைக் கண்டு துவளாமல் தொடர்ந்து முன்னேறுங்கள். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று பேசினார். தொடர்ந்து பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் சிறப்பு விருந்தினர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும்ரூபவ் பயிற்சியாளர்களுக்கும் கோப்பைகளும்ரூபவ் பதக்கங்களும் வழங்கினார். முன்னதாக சிறப்பு விருந்தினருக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் அவர்கள் நினைவு பரிசு மற்றும் பொன்னாடை வழங்கினர். இறுதியாக இரண்டாமாண்டு தகவல் தொழில்நுட்ப துறை மாணவி செல்வி.ஸ்ருதிகா நன்றி நவிழ நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டி.ஆர்.மணிசேகரன்ரூபவ் இணைச்செயலாளர் என்.பழனிவேல்ரூபவ் இயக்குனர் (நிர்வாகம்) முனைவர்.கே.கே.இராமசாமிரூபவ் முதன்மை உடற்கல்வி இயக்குனர் என். சந்தானராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்,பயிற்சியாளர்கள் அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள்ரூபவ் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.