கோகுலம் செவிலியர் கல்லூரியில் விளையாட்டு விழா

கோகுலம் செவிலியர் கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

Update: 2024-07-01 15:05 GMT

கோகுலம் செவிலியர் கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.


சேலம் கோகுலம் செவிலியர் கல்லூரியில் நேற்று விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு துணை மருத்துவ படிப்புகள் சார்ந்த கல்லூரி முதல்வர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கோகுலம் செவிலியர் கல்லூரி முதல்வர் தமிழரசி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக போலீஸ் துணை சூப்பிரண்டு பூபதிராஜன் கலந்து கொண்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் உடல்நலத்தை பேணுவதில் விளையாட்டின் பங்களிப்பு குறித்து விளக்கி கூறினார்.

மேலும் அவர் ஓட்டப்பந்தயம், கைப்பந்து, வளைப்பந்து, எறிபந்து, இறகுபந்து, மட்டைபந்து, கோ-கோ உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முடிவில் துணை முதல்வர் காமினி சார்லஸ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News