மாண்ட்போர்ட் சமுதாய பள்ளியில் விளையாட்டு விழா

சேலம் மாவட்டம், மாண்ட்போர்ட் சமுதாய பள்ளியில் விளையாட்டு விழாவில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-10 06:40 GMT

விளையாட்டு விழா

ஏற்காடு தாலுகா, குறவன்காட்டு கொம்புத்தூக்கி மாண்ட்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக முன்னாள் டி.ஜி.பி. வால்டர் ஐசக் தேவாரம் கலந்து கொண்டார். முத்துக்குமரன், விமலன், பங்குதந்தை இம்மானுவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். விளையாட்டு விழா மாணவர்களின் அணிவகுப்புடன் தொடங்கியது.

விழாவில் டி.ஜி.பி. வால்டர் ஐசக் தேவாரம் பேசுகையில், மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் பள்ளி முதல்வர் ஜார்ஜை பாராட்டினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் பாண்டியன் இல்ல ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

அணிவகுப்பு மரியாதையில் சோழன் இல்லமும், தேசிய மாணவர் படை இயக்கமும் சிறந்த அணிவகுப்புக்கான வெற்றிக்கோப்பையை பெற்றன. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News