சோனா தொழில்நுட்ப கல்லூரியில் விளையாட்டு விழா

சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2024-03-22 09:34 GMT

சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


சேலம் சோனா தொழில்நுட்பம் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. சோனா கல்வி குழும தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்து பேசுகையில், சோனா கல்விக்குழுமத்தில் விரைவில் அதிநவீன கிரிக்கெட் அகாடமி தொடங்க உள்ளதாக கூறினார்.

கல்லூரி விளையாட்டுத்துறை இயக்குனர்கள் கவிதாஸ், ஸ்ரீதரன் ஆகியோர் விளையாட்டு அறிக்கையை சமர்ப்பித்தனர். முதன்மை விருந்தினராக ரஞ்சி கோப்பை மூத்த தேர்வு குழு உறுப்பினர் லார்சன் கலந்து கொண்டு பேசினார். சோனா கல்லூரி சார்பில் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.

மண்டல, மாநில, அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான பளுதூக்குதல், சதுரங்கம், கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், தேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சோனா கல்விக்குழும முதல்வர்கள் கார்த்திகேயன், ஆர்.செந்தில்குமார், காதர்நவாஷ் மற்றும் ஜெ.கவிதா கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை இயக்குனர்கள் கவிதாஸ், ஸ்ரீதரன் உள்ளிட்டவர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News