சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் விளையாட்டு விழா

சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் விளையாட்டு விழா நடந்தது.

Update: 2024-06-16 09:13 GMT

போட்டியை துவக்கி வைத்தவர்கள்

விநாயகா மிஷனின் சென்னை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நுண்கலை அமைப்பு மற்றும் மாணவ பேரவை அமைப்பின் மூலம் விளையாட்டு விழா பையனூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

சென்னை வளாகத்தின் பொறுப்பு இயக்குனர் முத்துராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்துமதி கதிரேசன் கலந்து கொண்டு பேசினார். இவர் பலமுறை தேசிய தெற்காசிய மற்றும் ஆசிய மகளிர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பதும்,

குறிப்பிடத்தக்கது. பையனூர் ஊர் தலைவர் முத்துகுமார் கலந்து கொண்டார். அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தேசிய மாணவர் படை அணிவகுப்புடன் துறை மாணவர்களின் குழு வாரியாக அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து ஒலிம்பிக் தீச்சுடர் ஏற்றப்பட்டு கொடியேற்றத்துடன் விளையாட்டு குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பின்னர் துறையின் டீன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு வாழ்த்தினை வழங்கி புறாக்களை பறக்கவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். முடிவில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். விழா ஏற்பாடுகளை துறையின் உடற்கல்வி இயக்குனர் விக்னேஷ்,

நுண்கலை அமைப்பினர் ஆலோசகர்கள் ஜீவா, ஜெயஸ்ரீ மற்றும் மாணவர் பேரவை அமைப்பினர் ஆலோசகர்கள் பிரகதீஸ்வரன், ருக்மணி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News