சிறுத்தை நடமாடிய பகுதியில் சுற்றிய புள்ளிமான் - மக்கள் அச்சம்

குமரியில் சிறுத்தை நடமாடிய பகுதியில் புள்ளிமான் ஒன்று சுற்றியது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை

Update: 2024-02-22 07:19 GMT
குளத்தில் வந்த புள்ளிமான்
கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்துக்குட்பட்ட வடக்கு மலை அடிவாரத்தில் செண்பகராமன் புதூர் பகுதி உள்ளது. இந்த வனப் பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்ல வனத்துறை தற்போது தடை விதித்துள்ளது. இதனால் மலை அடிவாரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடத்த இரு வாரங்களுக்கு முன்பு இப்பகுதி சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் அப்பகுதியில் நெடுஞ்சாலை ஓரமுள்ள கட்டை குளத்தின் கரையில் ஒரு மான் பதட்டத்துடன் அங்கும் இங்கும்  ஓடி தண்ணீர் அருந்துவதாகவும் சுற்றி சுற்றி வந்தது. இதைக் கண்டபோது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மானை பார்க்க பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் மான் மிரண்டு காட்டுப் பகுதியில் ஓடியது. மான் நடமாடிய பகுதி, ஏற்கனவே சிறுத்தை தென்பட்ட பகுதியின் அருகில் உள்ளது. இதனால் சிறுத்தை விரட்டியதில் மான் அங்கு வந்திருக்கலாம் என்று பொதுமக்களிடைய பதற்றம் ஏற்பட்டது. மேலும் கோடைகாலம் என்பதால் மான் தண்ணீர் தேடி வந்திருக்க வேண்டும் பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே வனத்துறை பொதுமக்கள் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News