பெருமாள் கோவிலில் வசந்த உற்சவ விழா
தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோவிலில் நடந்த வசந்த உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-05-14 04:19 GMT
பரவாசுதேவ பெருமாள்
தர்மபுரி கோட்டை பரவாசுதேவபெருமாள் கோவிலில் வசந்த உற்சவ விழா நேற்று இரவு 8 மணியளவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வெட்டிவேர் பந்தல் அமைத்து சுகந்த பரிமள திவ்ய வஸ்துகளுடன் வசந்த உற்சவ சேவை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரா தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.