ஸ்ரீ பாலமுருகர் மற்றும் நவகிரக ஆலையம் கும்பாபிஷேக விழா!

போச்சம்பள்ளி அருகேயுள்ள குள்ளனூர் கிராமத்தில் ஸ்ரீ பாலமுருகர் மற்றும் நவகிரக ஆலையம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

Update: 2024-02-22 07:10 GMT
போச்சம்பள்ளி அருகேயுள்ள குள்ளனூர் கிராமத்தில் ஸ்ரீ பாலமுருகர் மற்றும் நவகிரக ஆலையம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள குள்ளனூர் கிராமத்தில் பலமையான கிராமத்தில் ஸ்ரீ பாலமுருகர் மற்றும் நவகிரக ஆலையம் உள்ளது. இநிலையில் கோவில் கற்ப கிரகத்தில் உள்ள பால முருகர் சிலையை புதுப்பிக்க கிராம மக்கள் தீர்மானித்து அதற்க்கான பணிகள் கடந்த வாரம் நிறைவுற்றது. இந்நிலையில் ஸ்ரீ பாலமுருகர் மற்றும் நவகிரக ஆலையம் கும்பாபிசேகம் நடத்த திட்டமிட்டு கிராம மகள் விரதமிருந்து இன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை கொடிமரம் நாடும் நிகழ்ச்சியும், கிராம மக்கள் ஒன்று கூடி முகூர்த்த கால் நடுதல் மற்றும் முளை பாலிகை எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று விடியற்காலை கங்கை தீர்த்தம் எடுத்தல் முதற்கால யாக பூஜை, ஸ்ரீ பாலமுருகர் பிரதிஷ்டை செய்தல் நடைபெற்றது. இரண்டாம் கால யாக பூஜை மற்றும் கோவில் கோபுர கலசங்களுக்கு கங்கை நீர் தெளித்து சிறப்பு பூஜைகள் ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவில் கிராம் மக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News