அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை நபா் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை திருப்பித் தருமாறு இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-06-26 13:34 GMT

அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை நபா் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை, நுாருல்யா மாவட்டத்தைச் சோ்ந்தவா் முகமது யாசிா் (38). அவரது மனைவி ரசிகா (29). இவா்கள் இருவரும் கடவுச்சீட்டு உள்ளிட்ட முறையான பயண ஆவணங்களின்றி கடந்த 2019-ஆவது ஆண்டு இந்தியா வந்த தகவலறிந்த கியூ பிரிவு போலீஸாா் அவா்களைக் கைது செய்து அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்தனா்.

இந்நிலையில், முகமது யாசிா் நீராவி குளியல் செய்யும் மின்னணு சாதனம் அடங்கிய (டூல் பாக்ஸ்)”தொகுப்பு ஒன்றை உரிய அனுமதியின்றி வாங்கியதாகக் கூ றப்படுகிறது. இதையறிந்த வருவாய்த் துறையினா் அந்தச் சாதனத்தை பறிமுதல் செய்துள்ளனா். அதனைத் திருப்பி தரக்கோரியும், சிறப்பு முகாமுக்குள் அனுமதிக்கப்படும் பொருட்கள் குறித்த விவரத்தை பட்டியலிட வேண்டும் எனவும் வலியுறுத்தி முகமது யாசிா் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளாா்.

அவரிடம் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தியும் 2-ஆவது நாளாக போராட்டத்தை தொடா்ந்துள்ளாா். இலங்கையை சோ்ந்த முகமது இஸ்மாயில் அப்துல் ஹமீது என்பவா் ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

பின்னா் அவா், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டாா். அவா் தன்னை தாயகம் அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில், அவரை சொந்தநாட்டுக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து அவா் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

Tags:    

Similar News