பாலியல் பலாத்காரம் வழக்கில் இலங்கை தமிழருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் பலாத்காரம் வழக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மைய இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதத்தை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2024-02-17 02:27 GMT

பைல் படம்


ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கடத்தி சென்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த இளைஞர் மான்(எ)நவீன்(எ)புவனேந்திரன்(21) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும்,அதே சிறுமியை கழுத்து அறுத்து கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மான்(எ)நவீன்(எ)புவனேந்திரன்(21) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மொத்தமாக, இரண்டு வழக்குகளை சேர்த்து 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2 லட்சமும்,மான்(எ)நவீன்(எ)புவனேந்திரன்(21) 25 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News