கும்பகோணத்தில் ஸ்ரீ ராம ரத யாத்திரை
கும்பகோணத்தில் ஸ்ரீ ராம ரத யாத்திரை நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், ராம ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளர். டி. குருமூர்த்தி விடுத்துள்ள செய்தி குறிப்பில்... அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் ஆலயத்தில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதனைக் கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
அயோத்தியை நினைவு கூறும் வகையில் தென்னக அயோத்தி என போற்றப்படும் ஸ்ரீ ராமஸாமி கோவில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் வெகு விமர்சையாக அயோத்தி திருவிழாவை கொண்டாடும் வகையில் கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ ராம ரத யாத்திரை 21ஆம் தேதி மாலை 5 மணிக்கு வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத, ராம நாம ஜெபத்துடன், மங்கல இசைகள் ஒலிக்க, பஜனை பாடல்களுடன் ராம பக்தர்கள் பங்கேற்கும் ரத ஊர்வலம் ராமஸாமி கோவில் அருகில் துவங்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெறுகிறது.