ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா !
கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த மே 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் கொடியேற்றம் நடைபெற்று விழா தொடங்கியது.
தொடர்ந்து தினசரி இரவில் திருவலஞ்சுழி ஆன்மீக அருள் ராமு, கீரன் பட்டாபிராம் பாகவதரின் மகாபாரத கதை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்குதல் எனும் தீமிதி நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.
இந்த தீமிதி திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மஞ்சள் நீராட்டு விழா, விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான தீமிதி திருவிழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாண்மைகள், மண்டகப்படி உபயதாரர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர்கள் மற்றும் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.