அருள்மிகு ஸ்ரீ விநாயகர், மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

கரூர் மாவட்டம் பழைய கஞ்சமனூரில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-03-07 07:00 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள கஞ்சமனூரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் யாக வேள்வியில், வேத மந்திரங்களை முழங்கி, புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர்.

கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சி கோவில் தர்மகத்தா தலைமையில் நடைபெற்றது. மேலும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட புதுகஞ்சமனூர், கருநெல்லியா கவுண்டனூர், ராசா பட்டியான்புதூர், பாலம்மாள்புரம் பழையகஞ்சமனூரை சேர்ந்த கொத்துக்காரர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.மேலும், கோவில் வளாகத்தில் கோ பூஜையும் நடத்தினர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News