ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதிஅம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதிஅம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

Update: 2024-02-21 09:37 GMT
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டு அதன் திருப்பணிகள் முடிவு பெற்றதை அடுத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆலய எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு அதில் யாக குண்டங்களில் நெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.    அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச நீரை தலையில் சுமந்து கொண்டு ஆலய வளாகத்தை சுற்றி வந்து விமான கலசத்தை அடைந்தனர்.  அங்கு ஒற்றைச் செப்பு விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.   இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு தரிசித்து சென்றனர்.
Tags:    

Similar News