மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில் ஆனி விழா கொடியேற்றம்
மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
Update: 2024-07-04 09:34 GMT
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய நிலையில் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, சீனிவாச பெருமாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அன்னவாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.13 நாட்கள் நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 7ல் கருடசேவை, 9ல் திருக் கல்யாணம், 12ல் தேரோட்டம் நடக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.