ஶ்ரீபெரும்புதூர் மேம்பாலம் கீழ் சிமென்ட் தடுப்புகளால் அவதி

ஶ்ரீபெரும்புதூர் மேம்பாலம் கீழ் சிமென்ட் தடுப்புகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

Update: 2023-12-29 08:38 GMT
பாலத்தின் கீழ் உள்ள சிமெண்ட் தடுப்புகள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் - -சிங்கபெருமாள் கோவில் இடையேயான நெடுஞ்சாலையில் உள்ளது ஒரகடம். இப் பகுதியைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் ஊழியர்கள் பணி செய்கிறார்கள்.

பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள, ஒரகடம் சந்திப்பில், வண்டலூர்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலை, மேம்பாலம் கீழே, ஸ்ரீபெரும்புதுார் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை ஓரமாக, பல ஆயிரம் கிலோ எடையுள்ள ரெடிமேட் சிமென்ட் தடுப்புகள், பல மாதமாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால், சாலையின் அகலம் சுருங்கி, போக்குவரத்திற்கு இடையூறாக மாறி உள்ளது. இது குறித்து பேருந்து பயணியர் கூறியதாவது: ஒரகடம் மேம்பாலம் கீழே, பேருந்து பயணியருக்காக அமைக்கப்பட்ட இருக்கையின் முன்பக்கமாக சிமென்ட் தடுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதால், தங்களுக்கான இருக்கையில் அமர முடியாமல், பயணியர், கால் கடுக்க நிற்கும் சூழல் எழுந்துள்ளது. இந்த சிமென்ட் தடுப்புகள் ஏன் இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, நெடுஞ்சாலை துறையினரிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.

தவிர, இந்த வழித்தடத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காலி இடம் இருக்கையில், மக்கள் அதிகம் புழங்குகிற, வாகனங்கள் அதிகம் பயணிக்கிற சாலை ஓரமாக சிமென்ட் தடுப்புகளை அடுக்கி வைத்திருப்பது, அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News