சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்: நாத்து நடும் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு கெங்கதேவன் குப்பம் 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் வேலைக்கு செல்வதற்காகவும், பள்ளி, மருத்துவமனை மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் தேங்கியுள்ள மழை நீரால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,இந்த சாலையில் இப்பொழுது பெய்த மழை மழைநீர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குளம் போல் தேங்கியுள்ளது. சாலையில் இருபக்கமும் வடிகால் கால்வாய் இல்லாமல் தேங்கி உள்ள மழைநீரால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் போன்ற வருகின்றது. இந்த சாலையை அமைத்துத் தர பல்லாண்டுகளாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ,பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாத்து நடும் நூதன போராட்டம் செய்தனர்.