வைகையாற்றை ஒட்டியுள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

வைகையாற்றை ஒட்டியுள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் நனைந்தபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.

Update: 2024-05-18 04:20 GMT

வைகையாற்றை ஒட்டியுள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் நனைந்தபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கொளுத்தும் வெயில் காரணமாக நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் வறண்டு வந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழையும் பெய்ய துவங்கியுள்ளது. மதுரை மாவட்ட முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 697.40 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மதுரை, வாடிப்பட்டியில் அதிகபட்சமாக 86 மி.மீட்டர் மழைப்பொழிவும், குறைந்தபட்சமாக எழுமலை பகுதியில் 0.60 மி.மி மழைப்பொழிவும், மாவட்ட முழுவதும் 31.70மி.மீ சராசரியாக மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது. நகர் பகுதிகளை கடந்து புறநகர் பகுதியான வாடிப்பட்டி, மேட்டுப்பட்டி, விமானநிலையம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது. சுரங்கப்பாதை முழுவதுமாக மழை நீர் மதுரை மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த பரவலான மழை காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள சுரங்கப்பாதை முழுவதுமாக மழை நீர் தேங்கியுள்ள நிலையில் சிம்மக்கல் , கோரிப்பாளையம் முதல் விரகனூர் வரை செல்லக்கூடிய வாகனங்கள் மழை நீரில் முழுவதுமாக நனைந்தபடி செல்கின்றது. மேலும் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் முழுவதுமாக நனைந்தபடி. செல்லும்போது சேறும் சகதியுமாக உள்ள தண்ணீர் பணிகளுக்கு செல்லக்கூடியவர்களின் ஆடைகள் மீது படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதனால் கால்களை வாகனத்தின் மேல் வைத்தபடி பக்க இயக்கும்போது விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. நீரில் மிதக்கும் வாகனங்கள் மதுரை பை சாலை முதல் ஆரப்பாளையம் பகுதியில் இருந்து வைகை ஆற்று கரையோரத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் செல்லக்கூடிய சுரங்கபாதை பகுதி முழுவதுமாக மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வைகை ஆற்றில் அந்த பகுதி முழுவதிலும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ள நிலையில் ஆற்றில் உள்ள நீரும் செல்ல முடியாத நிலையில் சுரங்கபாதை செல்வதால் தொடர்ந்து நீரின் அளவும் அதிகரித்துவருகிறது.

Tags:    

Similar News