சாலைகளில் கழிவு நீர் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-11-11 07:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. கோவிந்தசாமி நகர், மேட்டுப்பட்டி பகுதிகளில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.42 இலட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிறுவர் பூங்கா பணி தற்போது 90 சதவீதம் முடிவு பெற்ற நிலையில் இருந்து வருகிறது. இதில் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள், நடைபயிற்சி செல்வதற்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீரை, முறையான திட்டமிடல் இல்லாமல் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் கழிவுநீர் கால்வாயை அருகில் உள்ள சிறுவர் பூங்காவில் பேரூராட்சி நிர்வாகம் விட்டுள்ளது.‌

இதனால் சிறுவர் பூங்கா முழுவதும் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசும் வகையில் இருந்து வருகிறது. நடைபயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள தலங்களிலும் முழுவதுமாக கழிவுநீர் தேங்கி வருகிறது. ஆனால் ஒருபுறம் தினந்தோறும் காலை மாலை வேலைகளில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் பூங்காவில் நடை பயிற்சி செய்து வருகின்றனர். குழந்தைகளும் விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவில் விளையாடி வருகின்றனர். இந்த கழிவுநீர் தேங்கி வருவதால் கொசு உற்பத்தியாகி குழந்தைகளுக்கு டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவு வாய்ப்புகளும் இருந்து வருகிறது.

அதேபோல் இதே பகுதிகளில் தற்பொழுது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பில், புதிதாக கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறுகின்ற கழிவு நீர் கால்வாயில் விடப்பட்டுள்ளது. ' இந்த கழிவு நீர் கால்வாய்கள் மற்றொரு கழிவு நீர் கால்வாயில் இணைக்கப்படாமல், பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளதால்வீடுகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவு நீர் முழுவதும் கடத்தூர் பிரதான சாலையில் தேங்கி வருகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் வரும்போது, கழிவுநீர் பாதையில் வருபவர்கள், சாலையில் பயணிப்பவர்கள் மீது மேலே விழுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவுவதற்கான அபாயம் உள்ளது எனவே அரூர் பேரூராட்சி நிர்வாகம் முறையாக திட்டமிட்டு கழிவுநீர் கால்வாய்களை அமைத்து வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவு நீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதி பேரூராட்சி மன்ற தலைவரின் கணவரும், துணை தலைவரின் வார்டு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜய சங்கர்(பொறுப்பு) கேட்டபோது, சிறுவர் பூங்கா பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முடிவு பெறும் நிலையில் இருந்து வருகிறது. இந்த சிறுவர் பூங்காவில் கழிவு நீர் தேங்குவதை அகற்றி பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய், நெடுஞ்சாலை துறையினர் கால்வாய் அமைத்தால், அதில் இந்த கழிவுநீர் கால்வாய் இணைக்கப்படும். ஆனால் நெடுஞ்சாலை துறையினர் அமைக்க கால தாமதமாகிறது. தற்காலிகமாக சாலையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News