எலச்சிபாளையத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவிற்கு அஞ்சலி!
இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.
எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது.காங்கிரஸ் எஸ்சி பிரிவு முன்னாள் தலைவர் ரங்கநாதன் தலைமை வைத்தார். எஸ்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆர்.தங்கராஜ். முன்னிலை வைத்தார்.திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன். ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன். இளைஞர் அணி சதீஷ்குமார். அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஆர் சக்திவேல்.தொழில்நுட்ப பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி.சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ். ஒன்றிய செயலாளர் ரமேஷ். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன். காங்கிரஸ் வட்டார தலைவர் அறவாலத்தான்.ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் வேங்கைமார்பன்.தேமுதிக குமார். ஆகியோர் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.