முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழக முதலமைச்சர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திமுக கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட , பாலக்கோடு கிழக்கு ஒன்றியம் மல்லிக்குட்டை ஊராட்சி காமலாபுரம், போத்தாப்புரம் ஆகிய இடங்களில் தமிழக முதல்வர் செரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக,திமுக கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,ஒன்றிய கழக செயலாளர் A.கருணாநிதி முன்னிலை வகித்தார் இந்நிகழ்வில் மாவட்ட கழகப் பொருளாளர் தங்கமணி ,ஒன்றிய நிர்வாகிகள் சிவராஜ் ,பூமணி, சண்முகம்,சார்பு அணிகளின் நிர்வாகிகள் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் செல்வராஜ் ,விவசாய அணி கந்தையன் கிளைக் கழக நிர்வாகிகள் பழனி ,பிரபு ,மணி ,காவேரி, நாராயணன் மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.