உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்: பிரச்சார வாகனம் தொடக்கம்
"உரிமைகளை மீட்க ஸ்டாலினி குரல்" பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும் என்கிற பிரச்சார வாகனத்தை நாகை மாவட்ட திமுக செயலாளர் தொடங்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-24 11:28 GMT
பிரச்சார வாகனத்தை தொடக்கி வைத்த மாவட்ட செயலாளர்
தி.மு.க.தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கினங்க "உரிமைகளை மீட்க ஸ்டாலினி குரல்" பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும் என்கிற மாபெரும் முன்னெடுப்பை தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான காணொலி பிரச்சார வாகனத்தை நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என் கௌதமன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நாகை நகர கழக செயலாளரும், நகர மன்ற தலைவருமான .இரா.மாரிமுத்து மற்றும் மாவட்ட பொருளாளர் மு.லோகநாதன்நாகூர் நகர கழக செயலாளரும் நகர மன்ற துணை தலைவருமான .எம்.ஆர்.செந்தில்குமார் நாகை நகர கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..