ஆம்பூர் அருகே உறுப்புகள் தானம் வழங்கியவரின் உடலுக்கு அரசு மரியாதை

ஆம்பூர் அருகே உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நபரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நிர்வாகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-03-23 09:18 GMT

அரசு மரியாதை செய்த அதிகாரி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பி கஸ்பா பகுதியை சேர்ந்த நரேந்திரன் வயது 29 த/பெ பஞ்சநாதன் அவருடைய மகன் 20.03.2024 அன்று இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, அவசர நிலைப்பாட்டில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மூளைச் சாவு அடைந்தவிட்டதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டனர் மருத்துவர்கள்அவரின் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர் பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் இவரின் உடல் உறுப்புகள் தானம் செய்வதாக ஒப்புதல் வழங்கியதன் அடிப்படையில் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டனர்.

அரசு வழிகாட்டுதலின்படி உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நபரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News