சேலத்தில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி

சேலத்தில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது

Update: 2024-07-03 14:59 GMT

சேலத்தில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது


சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் கூறியதாவது:- சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், ஜான்சன் நண்பர்கள் கைப்பந்து குழு சார்பில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மரவனேரி செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் தொடங்குகிறது. தொடர்ந்து 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமை தாங்குகிறார். அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா போட்டியை தொடங்கி வைக்கிறார். முன்னதாக ரூ.6 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கைப்பந்து திடலை, சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் திறந்து வைக்கிறார்.

போட்டியில் சென்னை ஜேப்பியார் கல்லூரி கைப்பந்து அணி, சிவந்தி கைப்பந்து கழகம் அணி, எக்ஸலென்சி அணி, தமிழக காவல்துறை சென்னை அணி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.18 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.16 ஆயிரம், 5-ம் பரிசு ரூ.14 ஆயிரம், 6-ம் பரிசு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. 7-ந்தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர், சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு மற்றும் கோப்பை வழங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கைப்பந்து கழக துணைத்தலைவர் ராஜாராம், பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ் பிரபு, உதவி தலைமை ஆசிரியர் ராபர்ட், உடற்கல்வி இயக்குனர் தேவபிரபு, ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News