கொங்கணாபுரம் அருகே மாநில அளவிலான கபடி இறுதிப் போட்டி

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே அக்கரைப்பட்டியில் நடைபெற்ற கபடி இறுதிப்போட்டியில் கரூரைச் சேர்ந்த பிவிகே கபடி குழு முதல் பரிசை வென்றது

Update: 2024-06-06 07:25 GMT

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே அக்கரைப்பட்டியில் நடைபெற்ற கபடி இறுதிப்போட்டியில் கரூரைச் சேர்ந்த பிவிகே கபடி குழு முதல் பரிசை வென்றது


எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சாம்பட்டி PVK கபடி குழு முதல் பரிசு கோப்பையை தட்டி சென்றது . சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் கிராமம், அக்கரைப்பட்டி, பெண்ணரசி கபடி குழு நடத்தும் 24 ஆம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி அக்குழுவின் பொறுப்பாளர்கள் வேலன் அசோக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கபடி போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கபடி குழுவினர் பங்கேற்றனர். இதில் கரூர் மாவட்டம் பிச்சாம்பட்டி பி வி கே அணி வெற்றி பெற்று 50 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் முதல் பரிசு கோப்பையை தட்டிச்சென்றது .

இதே போல சேலம் சித்தர் கோவில் கொசவபட்டி சித்தன் கபடி குழு இரண்டாவது பரிசு கோப்பையையும், ஈரோடு டைமன் ஸ்டார் கபடி குழு மூன்றாம் பரிசையும், கோபி ஏ எம் கே சி கபடி குழுவினர் நான்காம் பரிசு கோப்பையையும்  தட்டிச்சென்றது. இந்த மாநில அளவிலான கபடி போட்டியில் சிறப்பாக விளையாடிய கபடி வீரர்களுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை அக்கரைப்பட்டி பெண்ணரசி கபடி குழு  சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News