மாநில அளவிலான கருத்தரங்கு!
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.;
Update: 2024-03-24 12:53 GMT
கருத்தரங்கு
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் "சிந்து முதல் பெருநை வரை" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு கல்லூரி முதல்வர் கா.பு.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குனர் மேஜர் கி.சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிந்து முதல் பெருநை வரை கல்வெட்டுகள் புகைப்படங்களை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.