மாநில அளவிலான கைப்பந்து போட்டி; சேலம் மாணவிகள் அசத்தல்

கோவையில் நடந்த மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டியில், ஆத்தூர் பாரதியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

Update: 2024-06-19 12:43 GMT

கோவையில் நடந்த மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டியில், ஆத்தூர் பாரதியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

மாநில அளவில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி கோவையில் நடைபெற்றது. இதில் ஆத்தூர் பாரதியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றனர். பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ், செயலாளர் சண்முகவேல், துணைச்செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் அருள்சர்மா, அப்புராஜ், பயிற்சியாளர் பரமசிவம் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் பவித்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News