அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் . நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Update: 2024-07-04 09:58 GMT
அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மற்ற துறைகளில் உள்ளது போல மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரான்ஸ்போர்ட் மற்றும் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ரிட்டையர்டு எம்ப்ளாயிஸ் வெல்ஃபர் அசோசியேசன் சார்பில் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நடந்த முற்றுகைப் போராட்டம் சங்கத்தின் தலைவர் பி. என். பழனிவேலு தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து நிர்வாகம் 103 மாத டிஏ நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும், இதர துறைகளைப் போல மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.