நிலை கண்காணிப்பு குழு சோதனை !
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடு பட்டு வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-09 10:18 GMT
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏதேனும் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா, என்பது குறித்து சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை மற்றும் சுங்கச்சாவடி பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நிலை கண்காணிப்பு குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, தாசில்தார் யுவராஜ், வட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.