எஸ்டிபிஐ கட்சியினர் காவல் நிலையத்தில் முற்றுகை!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி SDPIகட்சியின் நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி ஆலங்குடி காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நகர தலைவர் காளிமார்க் ரஜாக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-08 04:52 GMT
எஸ்டிபிஐ கட்சி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி SDPIகட்சியின் நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி ஆலங்குடி காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நகர தலைவர் காளிமார்க் ரஜாக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்ட தலைவர் H.ஸலாஹூதீன், மாவட்ட செயலாளர் முகமது சாதிக், வர்த்தக அணி மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், மாவட்ட பொருளாளர் காரியம் முகையதீன், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி தலைவர் ராயல் கனி, கிளைச் செயலாளர் MRS.பீர் முகமது, கல்லாலங்குடி கிளை தலைவர் ஜாகிர் உசேன், அஜ்மல் தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு முற்றுகையிடப்பட்டது. மேலும் காவல்துறையினரால் 50 நபர்களுக்கு மேல் கைது செய்தனர்.