சமயபுரத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த இளைஞரின் பைக்கை திருட்டு

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த இளைஞரின் மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-04-14 16:12 GMT

கோப்பு படம் 

திருச்சி எடத்தெரு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான பவுல் ஜெரோம் லியோ.இவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்க்காக மோட்டார் பைக்கில் வந்துள்ளார்.அப்போது சமயபுரத்தில் உள்ள மாசி பெரியண்ணன் கோயில் அருகே நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்வதற்க்காக சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் பைக் மாயமாகியிருந்தது. மர்ம நபர்கள் மோட்டார் பைக் திருடிச் சென்றனர். இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் பவுல் ஜெரோம் லியோ கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News