திருடுபோன 1லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருடு போன ஒரு லட்சம் மதிப்பிலான 8 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2024-06-27 17:31 GMT

செல்போன் ஒப்படைப்பு

விருதுநகரில் திருடு போன ஒரு லட்சம் மதிப்பிலான 8 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு. விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் எல்லையில் உள்ள எட்டு நபர்களிடம் திருடு போன ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. 

 விருதுநகர் அரசு மருத்துவமனை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் செல்போன்கள் அடிக்கடி திருடு போயின. இதுகுறித்து செல்போன் உரிமையாளர்கள் கொடுத்த புகாரில் விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

இதன் அடிப்படையில் ஒரு லட்சம் மதிப்பிலான எட்டு செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த செல்போன்களை உரியவர்களிடம் விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா ஒப்படைத்தார்.

செல்போன்களை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் சாந்தி,எஸ்.ஐ ரவி,எஸ்ஐ காசியம்மாள். முதல் நிலைக் காவலர்கள் ராமசந்திரன்,கார்த்திக் ஆகியோரை டி எஸ் பி பவித்ரா பாராட்டினார்

Tags:    

Similar News